கோவையில் கோடைக்கால பயிற்சி முகாம்- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு- முழு விவரங்கள் உள்ளே...

published 9 months ago

கோவையில் கோடைக்கால பயிற்சி முகாம்- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு- முழு விவரங்கள் உள்ளே...

கோவை: கோவை மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்தான அறிவிப்பில், தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, ஐம்னாஸ்டிக், கால்பந்து விளையாட்டு போட்டிகளை 29.04.2024 முதல் 13.05.2024 வரை நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. அதில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கு கலந்து கொள்ளலாம். கோடைக்கால பயிற்சி முகாம் காலை மேணி முதல் 8.00 வரையிலும் மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் நடத்தப்படும். அதற்கு பயிற்சி கட்டணம் தலைமையகத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி கட்டணம் ரூ.200வீதம் ஆன் லைன்/ Pos machine மூலமாக மட்டுமே பெறப்படும். எக்காரணம் கொண்டும் ரொக்கமாகப் பெறப்படாது. மேலும் இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலரது தொலைபேசி எண். 7401703489 மற்றும் 0422-2380010 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆதார் கார்டுடன் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்குபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற உள்ள விளையாட்டுக்களின் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளம் அல்லது QR Code-ஐ ஸ்கேன் செய்து தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்லைவர் கிராந்திகுமார் பாடி  தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe