மன அழுத்தம் காரணமாக ஈஷா யோக மையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

published 2 years ago

மன அழுத்தம் காரணமாக ஈஷா யோக மையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கோவை: ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஆந்திர மாநில இளைஞர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர்  கொள்ளு ரமணா (32). இவர்  மன அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில்  சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு ஈசாவிலுள்ள அவரது அறையில்  கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கடிதத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தது கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலாந்துறை  போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் ரமணாவின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி பெற்று வந்த நபர் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe