மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: நேர்முகத் தேர்வு மட்டுமே... ரூ 36,000 சம்பளம்!

published 9 months ago

மத்திய அரசு நிறுவனத்தில்  வேலை: நேர்முகத் தேர்வு மட்டுமே... ரூ 36,000 சம்பளம்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இர்கான் (IRCON) நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இங்கு  சிவில் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணியிடங்கள்

Works Engineer/Civil  (4)

கல்வி

Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்

இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ 36,000  மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

எப்படி விண்ணப்பிப்பது?

https://www.ircon.org/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, கொள்ள வேண்டும். பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி  07.05.2024.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Ircon International Limited 2 nd Floor, Plot No 7(Adjacent to Qmax Systems), Rukmini Nagar, 4th Street, Poonamallie, Chennai - 600056

மேலும் விவரங்கள்

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://www.ircon.org/ என்ற இணையதளப் பக்கத்தை பார்க்கவும்.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe