மழை வேண்டி இஸ்லாமிய மக்கள் கோவையில் சிறப்பு தொழுகை...

published 1 week ago

மழை வேண்டி இஸ்லாமிய மக்கள் கோவையில் சிறப்பு தொழுகை...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/HnNiEmYAweu4lUIbHWUht6

கோவை: கோவை கரும்புக்கடை  சாரமேடு பகுதியில்  கோவை மாநகர ஜமாத்துல் உலமா சபை மற்றும் சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு சார்பில்  மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது

  தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையிலும் நாளுக்கு நாள் வேலையின் தாக்கம் அதிகமாக இருந்து வெப்ப அலை வீசுவதாலும் போதிய மழை நீர் இல்லாதாலும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.


இதனால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் பொதுமக்கள் குடிக்கு தண்ணீர் இன்றியும் அணைகளில் நீர்வரத்து வரலாறு காணாத அளவில் குறைந்து வருவதால் சிறப்புத் தொழுகையில் ஈடுப்பட்டனர்.


விவசாயிகளும் போதிய நீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.கால்நடைகளுக்கு புற்கள் கூட இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

மழை பெய்ய வேண்டி கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் மாநகர ஜமாத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது அய்யூம் பாகவி 
தொழுகை நடத்தினார்
இதில்  இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்த தொழுகையில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.


இறுதியில்  சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பின் தலைவர் மௌலவி முகமது அலி இம்தாதி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் 
ஹாஜி இனையதுல்லா, 
மௌலவி அப்துல் ரகுமான் உலுமி,
பைசல், மற்றும்  
மற்றும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw