தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்...

published 9 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்...

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் 106 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது. 

இம்மையத்தின் மூலம் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு இடையே புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்வதற்கு வழி வகுக்கும், பொது / தனியார் கூட்டு முயற்சியின் மூலம் உயிரி தொழில்நுட்பவியல், உயிர் தகவலியல், மரபியல், மூலக்கூறு கண்டறிதல், மரபணு தனிமைப்படுத்தல், உயிரணு வளர்ப்பு மற்றும் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.

இதன் தொடக்கமாக, உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் மற்றும் வேளாண் தொடக்க நிறுவனங்களுக்கு இடையே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  நடைபெற்றது.

உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் சார்பாக தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குனர் முனைவர் செந்தில் தொடக்க நிறுவனங்களான ஒன்னோமிக்ஸ் பிரைவேட் லிமிடெட், புஸ்மர் அக்ரோ யுட்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மகா சக்தி நேச்சுரல், யுனிவர்ஸ் ஃபுட் புராடக்ட்ஸ் மற்றும் மதிஜினி நாராயணன்  இடையே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி மற்றும் பதிவாளர் முனைவர் தமிழ்வேந்தன் ஆகியோர்கள் முன்னிலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநர் முனைவர் சோமசுந்தரம், தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் முனைவர் ஆர்ரவிகேசவன், தாவர உயிரி தொழில்நுட்பத்துறை தலைவர் முனைவர் கோகிலாதேவி, திட்ட இயக்குனர் மற்றும் பேராசிரியர் முனைவர் மோகன்குமார், உயிரி தொழில்நுட்ப மகத்துவ மைய தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் மற்றும் தொடக்க நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe