பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 29 லட்சம் மோசடி- கோவையில் மாஜி அரசு ஊழியர் கைது...

published 9 months ago

பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 29 லட்சம் மோசடி- கோவையில் மாஜி அரசு ஊழியர் கைது...

கோவை: கோவையில் பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மனைவிக்கு பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 29 லட்சம் மோசடி செய்ததாக மாஜி அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
 

கோவை ஆர்எஸ்புரம் அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் பிரபு(41). இவர் தொண்டாமுத்தூர் ரோட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். பிஇ பட்டதாரியான இவரது மனைவி அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். அப்போது பிரபுக்கு, மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வடவள்ளி நவாவூர் பிரிவை சேர்ந்த தங்கவேல்(80) என்பவர் அறிமுகமானார். 

அப்போது அவர் பிரபுவிடம் எனக்கு அரசு அதிகாரிகள் பலர் தெரியும், அவர்கள் மூலம் காவியாவுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருகிறேன் என தெரிவித்துள்ளார். அதற்கு பலருக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது என கூறி தங்கவேல், பிரபுவிடம் பல கட்டங்களாக ரூ. 29 லட்சம் வாங்கினார். ஆனால் அவர் கூறியபடி, வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த மோசடிக்கு கோவையை சேர்ந்த ரவிபாரதி, சுந்தர்காந்த், உமா ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. 

இது குறித்து பிரபு வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாஜி அரசு ஊழியர் தங்கவேலை கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக ரவிபாரதி, சுந்தர்காந்த் மற்றும் உமா ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe