குடிபோதையில் பிரச்னை; தொழிலாளிக்கு கத்திக்குத்து!

published 1 week ago

குடிபோதையில் பிரச்னை; தொழிலாளிக்கு கத்திக்குத்து!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/HnNiEmYAweu4lUIbHWUht6

கோவை: கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ராஜ் (54), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு அருகே உறவினர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (34), குடிபோதையில் ராஜூவிடம் தகராறு செய்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தகாத வார்த்தைகளால் பேசி ராஜை சரமாரியாக தாக்கினார்.


பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில், ராஜூக்கு தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அதற்குள் அங்கிருந்து செந்தில்குமார் தப்பி ஓடிவிட்டார். கத்திகுத்தில் காயமடைந்த ராஜை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


இது குறித்து போத்தனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர். இதில், முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் தொழிலாளியை கத்தியால் குத்திய வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த செந்தில்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw