தனுஷ் 50: 'ராயன்' படத்தின் தரமான அப்டேட்! இன்ப அதிர்ச்சி தந்த படக்குழு!

published 9 months ago

தனுஷ் 50: 'ராயன்' படத்தின் தரமான அப்டேட்!  இன்ப அதிர்ச்சி தந்த படக்குழு!

நடிகர் தனுஷின் 50 வது படமான 'ராயன்'  ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் சிங்கிள் மே 9-ம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Dhanush's 50th film titled 'Raayan'; first look out - The Hindu

தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. துஷாரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், வரலட்சுமி, காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Riveting Raayan (2024): Movie Review, Cast, Crew, Release Date, Story, OTT  - EntertainmentGuru

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக  கடந்த டிசம்பர் மாதம்,  நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Image

வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  
இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் வரும் மே 9-ம் தேதி வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்  வரும் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளதாகவும் படக்குழுவினர்  அப்டேட்   தெரிவித்துள்ளனர். 
ரசிகர்கள் மத்தியில்  இப்படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe