கோவையில் உள்ள முதியோர் இல்லங்கள், முதியோர் வளாகங்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பதிவு செய்திடுக…

published 9 months ago

கோவையில் உள்ள முதியோர் இல்லங்கள், முதியோர் வளாகங்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பதிவு செய்திடுக…

கோவை: கோவை மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் சேவை நோக்கில் அல்லது வணிக நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் இல்லங்கள் / ஓய்வுகால முதியோர் இல்லங்கள் / முதியோர் வளாகங்கள் / உதவி வாழும் இல்லங்கள் / நோய் தடுப்பு பராமரிப்பு இல்லங்கள் / நல்வாழ்வு பராமரிப்பு இல்லங்கள் / இடைநிலை பராமரிப்பு இல்லங்கள் 

(Senior citizen complex / Living Apartments/Assisted Living Homes / Palliative care Homes / Hospice care Home Transitional care Home) எண் எண்:83 நாள்:23.11.2016-ன்படி பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம்- 2007-ன் கீழ் மாவட்ட சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும்.

எனவே, கோவை மாவட்டத்தில் அரசாணை எண்:83-ன் கீழ் பதிவு செய்யாமல் செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் இல்லங்கள் / ஓய்வுகால முதியோர் இல்லங்கள் / முதியோர் வளாகங்கள் அனைத்தும் உரிய ஆவணங்களுடன் கோயம்புத்துார் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கருத்துரு சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு
மாவட்ட சமூகநல அலுவலக தொலைப்பேசி எண்: 0422-2305126 என்ற எண்ணை அணுகலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe