கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்! லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

published 9 months ago

கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்! லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கிளாமர்  போட்டோஷூட் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக  அறிமுகமானவர் தான் நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர் மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில்  பங்குபெற்று டைட்டில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து வெள்ளித்திரையில்  அட்டக்கத்தி படத்தின் மூலம் வரவேற்பை பெற்றார். உயர்திரு 420,  ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, வட சென்னை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்தார். அதிலும் காக்கா முட்டை படம் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது.  இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு  பட வாய்ப்புகள் குவிந்தன.

திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன், ஃபர்ஹானா ஆகிய படங்களில்  நாயகியாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.  மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.   தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் ஏராளமான படங்கள் வரிசையாக உள்ளன.

பிசியான நாயகியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடிக்கடி போட்டோஷூட் செய்வதும்  வழக்கம்.
இந்த நிலையில் தற்போது போட்டோஷூட் செய்த புகைப்படங்களை  இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். 
அதில்  லோ நெக் ஆடையில் கவர்ச்சி  போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe