ரூ.55K தாண்டியது தங்கம்.. போட்டி போட்டுக்கொண்டு முன்னேறும் வெள்ளி!

published 9 months ago

ரூ.55K தாண்டியது தங்கம்.. போட்டி போட்டுக்கொண்டு முன்னேறும் வெள்ளி!

கோவை: இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தற்போது தங்கம் விலையில் புதிய வரலாறுகளை படைத்து வருகிறது.

மே மாதத்தின் தொடக்கத்தில் சரிவை சந்தித்த தங்கம் விலை, அதன் பிறகு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முகூர்த்த தினங்களால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.54,800க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

இதனிடையே தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,900க்கும் ஒரு பவுன் ரூ.55,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.328 விலை அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.5,652க்கும் ஒரு பவுன் ரூ.45,216க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியும் தங்கத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு விலை அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் பைசா கணக்கில் உயர்ந்து வந்த வெள்ளி விலை, தற்போது ரூபாயில் அதிகரித்து வருகிறது. 

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.50 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe