கோவை- மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலுக்குள் ஒழுகிய மழை நீர்- பயணிகள் அவதி...

published 9 months ago

கோவை- மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலுக்குள் ஒழுகிய மழை நீர்- பயணிகள் அவதி...

கோவை: தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 

இந்நிலையில் கோவை- மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மழை நீர் பெட்டிகளுக்குள் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்தனர்.

கோவையில் இருந்து ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் முக்கியமான எக்ஸ்பிரஸ் இரயில் இதுவாகும். நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இதில் பயணம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று கரூர்- ஈரோடு இடையில் பெய்த கனமழையில் மழை நீர் ரயில் பெட்டிக்குள்(D14) ஒழுகியதால் பயணிகளும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் மழை நீர் ஒழுகும் இடத்தில் டீ குடிக்கும் பேப்பர் கப்பை வைத்து மழை நீர் விழுகாதவாறு செய்தனர்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை- கோவை ஜனசதாப்தி ரயிலில் இதே போல் மழை நீர் ரயில் பெட்டிகளுக்குள் அருவாக ஊற்றியது. இந்நிலையில் கோவை- மயிலாடுதுறை சதாப்தி ரயிலிலும் மழை நீர் ஒழுகுவதால் உடனடியாக ரயில்வே நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe