அனிருத் இசையில் 'இந்தியன் 2' முதல் பாடல்... படக்குழு சூப்பர் அப்டேட்!

published 9 months ago

அனிருத் இசையில் 'இந்தியன் 2' முதல் பாடல்... படக்குழு சூப்பர் அப்டேட்!

இந்தியன் 2 படத்தின் முதல் பாடல்  நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது.  

கடந்த 1996-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் படம் வெளியானது.  லஞ்சம், ஊழல் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இப்படம்  பெற்றது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

Kamal Haasan's 'Indian 2' to release on July 12, 1st single to be out on  May 22 - India Today

இந்த நிலையில்  27 வருடங்களுக்கு பிறகு இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Exclusive: Kamal Haasan starrer Indian 2 first single to drop on THIS date  | PINKVILLA

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.  ஜூலை மாதம் 17ம்  தேதி படம் திரையரங்குகளில் ரிலீஸ் வெளியாகும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

இந்த நிலையில்  இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் நாளை (மே 22) வெளியாகும் என  படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  'பாரா' என பெயரிடப்பட்டுள்ளள  இப்பாடலுக்கான ப்ரமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.  

‘பாரா’ பாடல் ப்ரமோ வீடியோவை காண லிங்கை க்ளிக் செய்யவும் https://x.com/LycaProductions/status/1792881088961859979 .

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe