என்னடா அவசரம் உனக்கு..? கோவையில் திருடச்சென்ற வீட்டில் அசிங்கம் செய்த திருடன்!

published 9 months ago

என்னடா அவசரம் உனக்கு..? கோவையில் திருடச்சென்ற வீட்டில் அசிங்கம் செய்த திருடன்!

கோவை: வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை அடித்து வீட்டின் நடுவே மலம் கழித்து சென்ற திருடன்.

கோவை, தொண்டாமுத்தூர் சாலை அருகே உலியம்பாளையம் அடுத்த குப்புசாமி வீதியில் குடியிருப்பவர் ஞானசுந்தரம் என்ற குமார் (44). இவர் கொசு வலை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.  விடுமுறை தினம் என்பதால் இவரது மனைவி மகன் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர். 

நேற்று மதியம் அவர்களை அழைத்து வர குமார் தன் வீட்டை பூட்டி விட்டு சென்று உள்ளார். இன்று தன் மனைவி குழந்தைகளுடன் தன் வீட்டை வந்து திறந்து பார்த்த போது, படுக்கை அறை உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு ஆடைகள் களையப்பட்டு இருந்தன. மேலும் பீரோவில்  வைத்து இருந்த நகை - பணம் காணாமல் போயி இருந்தது. மேலும் வீட்டின் பின் பகுதியில் ஓடு பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் வடிவேல் குமார் விசாரணை மேற்கொண்டார். வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்த போது நகை 22 பவுன், பணம் 3 லட்சம் வரை கொள்ளை போனதாக‌ முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை அடித்து சென்ற கொள்ளையன் வீட்டின் நடுவே மலம் கழித்து சென்று உள்ளான்.

இந்த சம்பவம் இந்த பகுதியில் முற்றிலும் வித்தியாசமான சம்பவம் எனவும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதி முழுவதும் மக்களுக்கு தெரிந்ததால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe