கோவையில் மழையினால் வழுக்கி விழுந்து காட்டு மாடு உயிரிழப்பு…

published 9 months ago

கோவையில் மழையினால் வழுக்கி விழுந்து காட்டு மாடு உயிரிழப்பு…

கோவை: கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு ஆனைகட்டி மத்திய சுற்று துமனூர் சராக பகுதியில் காட்டு மாடு ஒன்று அகழியில் விழுந்ததாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து வனச் சரக அலுவலர் தலைமையில் ஒரு குழு விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, காட்டு மாடானது மழையின் காரணமாக வழுக்கி விழுந்து இறந்த நிலையில் காணப்பட்டது. 

 

மேலும் வன கால்நடை அலுவலர் தகவல் தெரிவிக்கப்பட்டு  மாவட்ட வன அலுவலர், வன கால்நடை அலுவலர், கோவை வனச் சரக அலுவலர், துடியலூர் பிரிவு வணவர் கோவை வனச் சரக பணியாளர்கள் மற்றும் WNCT அரசு சாரா அமைப்பு உறுப்பினர் ஆகியோரது முன்னிலையில் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும் காட்டு மாடானது பலத்த மழையின் காரணமாக அகழியில் தவறி விழுந்ததில் இருதயம் மற்றும் நுரையீரல் அழுத்தம் ஏற்பட்டு இருந்து உள்ளது என்பது கண்டறியப்பட்டது. இறந்த காட்டு மாடின் வயது 10 -12 வரை இருக்கக் கூடும்  என்பதையும் உடற்கூறு ஆய்வுக்கு பின் உடலை குழி தோண்டி புதைத்த வனத் துறையினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe