வாக்கு எண்ணுகை அலுவலர்களுக்கான கணினி வழி குலுக்கல்...

published 9 months ago

வாக்கு எண்ணுகை அலுவலர்களுக்கான கணினி வழி குலுக்கல்...

கோவை: மக்களவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, வாக்கு எண்ணுகை மேற்பார்வையாளர்கள், வாக்கு எண்ணுகை உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றுவதற்கு கணினி வழியில் முதலாவது குலுக்கல் (1" Randomization)
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

மக்களவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, வாக்கு எண்ணுகை மேற்பார்வையாளர்கள். வாக்கு எண்ணுகை உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றுவதற்கு கணினி வழியில் முதலாவது குலுக்கல் ( Randomization) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக ஆகியோர் கலந்துகொண்டனர்.

மக்களவைப் பொதுத்தேர்தல்-2024 கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்கு அரசினர் தொழில்நுட்ப கல்லூரியிலும், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வருகின்ற 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணுகை மேற்பார்வையாளர்கள், வாக்கு எண்ணுகை உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றுவதற்கு கணினி வழியில் குலுக்கல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
 

கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிகளான, பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு 123 வாக்கு எண்ணுகை மேற்பார்வையாளர்கள். 123 வாக்கு எண்ணுகை உதவியாளர்கள் மற்றும் 125 நுண்பார்வையாளர்கள். 

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளான தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைபேட்டை மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு 111 வாக்கு எண்ணுகை மேற்பார்வையாளர்கள். 111 வாக்கு எண்ணுகை உதவியாளர்கள் மற்றும் 113 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 20 சதவீதம் கூடுதல் இருப்பு (20% Reserve) உட்பட 706 வாக்கு எண்ணுகை மேற்பார்வையாளர்கள், வாக்கு எண்ணுகை உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றுவதற்கு, கணினி வழியில் முதலாவது குலுக்கலின் மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கோயம்புத்தூர் நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றவுள்ள வாக்கு எண்ணுகை மேற்பார்வையாளர்கள், வாக்கு எண்ணுகை உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் ஆகியோர்களுக்கான பயிற்சி வகுப்பு 23.05.2024 அன்று ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்திலும், பொள்ளாச்சி நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றவுள்ள வாக்கு எண்ணுகை மேற்பார்வையாளர்கள், வாக்கு எண்ணுகை உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் ஆகியோர்களுக்கான பயிற்சி வகுப்பு 24.05.2024 அன்று பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe