மின்மினி பூச்சியை போல... காஞ்சி பட்டு சேலையில் பொம்மி!

published 8 months ago

மின்மினி பூச்சியை போல... காஞ்சி பட்டு சேலையில் பொம்மி!

நடிகை அபர்ணா பாலமுரளி காஞ்சிபுரம் சேலை கட்டி எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ், மலையாளம் மொழி திரைப்படங்களில்  முன்னணி நடிகையாக  வலம் வருபவர்  அபர்ணா பாலமுரளி.  மலையாள படத்தில் முதல் முறையாக  அறிமுகமான இவர், தமிழில் சூரரை போற்று படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.  

படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில்  நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். சூரரைப் போற்று  படத்தில் இவரது  நடிப்பிற்காக, 2021 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது பெற்றார்.

இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில்  8 தோட்டாக்கள் படத்தின் மூலம்  அறிமுகமானார்.  ஜி.வி.பிரகாஷ்  நடித்த சர்வம் தாள மயம் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் சற்று குண்டாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்த நாயகியாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் உடல் சற்று மெலிந்து காட்சி அளிக்கிறார். படத்திற்காக உடல் எடையை குறைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.



இந்த நிலையில் தற்போது  அபர்ணா பாலமுரளி காஞ்சிபுரம் சேலையில் இருக்கும் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதில் செம க்யூட்டாக இருக்கும் இவருக்கு, ரசிகர்கள் இதயங்களை பறக்க விட்டு வருகின்றனர்.   

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe