புஷ்பா 2 தி ரூல்: வெளியான புது அப்டேட்!

published 8 months ago

புஷ்பா 2 தி ரூல்: வெளியான புது அப்டேட்!

'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில்   நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், புஷ்பா தி ரைஸ் படம் வெளியானது. இந்தப் படம் வரவேற்பையும், வெற்றியையும் பெற்று சர்வதேச அளவில் 300 கோடி ரூபாயை தாண்டி வசூலில் சாதனை படைத்தது.  

Pushpa 2 First Single Promo: Allu Arjun's Song Pushpa Pushpa Gets A Release  Date

இப்படத்திற்காக கடந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜூன்  வென்றார். தெலுங்கு சினிமாத் துறையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற முதல் நடிகர் என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார்.  

முதல் பாகத்தைத் தொடர்ந்து தற்போது புஷ்பா தி ரூல் - இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். முதல் பாகத்திற்கு இசையமைத்து தேசிய விருது வென்ற தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

படம்  ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக  நடைபெறுகிறது.  புஷ்பா 2 படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற  நிலையில்,  இரண்டாவது பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.  'சூசெகி (The Couple Song)' என்ற பாடல் வரும்  29ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe