கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் பங்க் மேலாளர் உள்பட 4 பேரிடம் வழிபறி

published 2 years ago

கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் பங்க் மேலாளர் உள்பட 4 பேரிடம் வழிபறி

கோவை, ஜூலை.24- கோவை டாடாபாத் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது28). பெட்ரோல் பங்க் மேலாளர். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் விக்னேசை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்திமுனையில் அவரை மிரட்டி சட்டைப்பாக்கெட்டில் இருந்த ரூ. 500-யை பறித்து தப்பினார். இது குறித்து விக்னேஷ் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த செட்டிபாளையம் பாரதி நகரைச் சேர்ந்த ஈசாத் அலி (19) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சித்ரா பூங்கா நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). என்ஜினீயர். இவர் நேற்று கிணத்துக்கடவு செல்வதற்காக உக்கடம் பேருந்து நிலையம் சென்றார். அங்கு அவர் தனது செல்போனில் வாடகை கார் புக் செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென விக்னேசை மறித்து அவரது கையிலிருந்த செல்போனை பறித்து தப்பினர். புகாரின் பேரில், உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை செல்வபுரம் ரங்கப்பா லே-அவுட்டை சேர்ந்தவர் சுப்ரமணி (42). இவர் நேற்று தெலுங்குபாளையம் பிரிவில் நடந்து சென்றார். அப்போது அவரை மறித்த 3 வாலிபர்கள் அவரை மிரட்டி ரூ. 1000 மற்றும் செல்போனை பறித்து தப்பிச் சென்றனர். புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதேபோல், கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த முத்துபாபு(42) வெள்ளலூர் பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த 3 பேர் கும்பல் முத்துபாபுவை மிரட்டி ரூ.500-யை பறித்துச் சென்றது. புகாரின் பேரில், போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறிப்பில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe