இறந்தவர் உடலை புதைக்க குழி தோண்ட முடியவில்லை! கோவை கலெக்டரிடம் மக்கள் புகார்!

published 8 months ago

இறந்தவர் உடலை புதைக்க குழி தோண்ட முடியவில்லை! கோவை கலெக்டரிடம் மக்கள் புகார்!

கோவை: கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி அருகே செம்மேடு பகுதியில் ஈசா நிறுவனம் சார்பில் மின் மயானம் அமைய உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை ரத்து செய்ய கோரியும் இரண்டு தினங்களுக்கு முன்பு  பெரியாரிய அம்பேத்கரிய இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மலை வாழ் மக்கள் தங்களுக்கு அப்பகுதியில் மின் மயானம் வேண்டுமென கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில்,  அப்பகுதியில் மின் மயானம் இல்லாததால் மழை காலங்களில் சிரமமாக உள்ளதாகவும், குழி தோண்ட முடியாக நிலை ஏற்படுவதாக தெரிவித்தனர்.  மேலும் அங்கு வனவிலங்குகள் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்த அவர்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து அதற்கான அனுமதி பெற்ற நிலையில் ஈசா நிறுவனம் சார்பில் மின் மயானம் அமைக்க ஏற்பாடு செய்வதாக கூறியதால் மக்கள் அனைவரும் மகிழ்ந்ததாக கூறினர். 

பின்னர் காமராஜர், சிவஞானம் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது வேதனை அளிப்பதாக கூறினர். மாவட்ட ஆட்சியர் தங்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe