பழங்குடியின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகைக்கு விண்ணபிக்க இணையதளம் அறிவிப்பு...

published 8 months ago

பழங்குடியின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகைக்கு விண்ணபிக்க இணையதளம் அறிவிப்பு...

கோவை: பழங்குடியினர் நல இயக்குநரகம் மூலம் போஸ்ட் மெட்ரிக் கல்விஉதவித் தொகை பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

தற்போது, புதிய திட்டமாக ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டி (Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர்படிப்பை (National Overseas Scholarship Scheme (NOS) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.


எனவே, ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் https://overseas.tribal.gov.in/
மூலம் இணையவழியில்
விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசிநாள் 31.05.2024 எனவும் மேலும் விவரங்களுக்கு https://overseas.tribal.gov.in/ அமைச்சகத்தின் போர்ட்டலைப் பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe