கோவையில் நடைபெற்ற தபெதிக மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்...

published 8 months ago

கோவையில் நடைபெற்ற தபெதிக மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்...

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்  அக்கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  அதில் முக்கிய தீர்மானமாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜீ.ஆர்.சாமிநாதனை பணி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், அவர் முன்பு இருந்த ஆர்.எஸ்.எஸ்  இயக்கத்தை சார்ந்தும் அவர்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பு வழங்கி வருவதாக கூறினார். சவுக்கு சங்கர் வழக்கில் நியாத்திற்கு விரோதமாக தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்த அவர் ஜி.ஆர்.சாமிநாதனை அவர் வகிக்கும் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe