பக்கத்து வீட்டுக்காரர்கள் வேண்டுமா? வேண்டாமா? நியூஸ் க்ளவுட்ஸ் சர்வே!

published 8 months ago

பக்கத்து வீட்டுக்காரர்கள் வேண்டுமா? வேண்டாமா? நியூஸ் க்ளவுட்ஸ் சர்வே!

பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவரை சார்ந்து தான் வாழ வேண்டும். யாருடைய தயவும் இல்லாமல் இந்த உலகில் வாழ்ந்து காட்ட முடியாது என்பது சரிதானே?

இன்றைய நவீன காலத்தில் "எனக்கு நான் போதும், எவர் தயவும் இல்லாமல் என்னால் வாழ்ந்து காட்ட முடியும்" என்று சிலர் ஆதங்கத்தில் தெரிவிப்பது உண்டு.

ஆனால், ஒருவர் பணிக்குச் செல்லும் இடமாக இருந்தாலும் சரி, பெரும் செல்வந்தராக இருந்தாலும் சரி… மற்றவரின் தயவு ஏதேனும் ஒரு விதத்தில் தேவைப்படும் என்ற உண்மையை புறந்தள்ளிவிட்டுப் பேச முற்படுகின்றனர். ஏன்? நாமே கூட ஆதங்கப்படும் சில நேரங்களில் அப்படி சிந்தித்து இருப்போம்!

இப்படி உதவிகளுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்கு, உற்றார் உறவினர்கள் பலர் இருந்தாலும் அவசர நேரத்தில், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நிற்பவர்கள் தான் நமது சுற்றத்தார் எனப்படும் பக்கத்துவீட்டுக்காரர்கள். அவசர கால உதவி என்று மட்டுமல்லாது பல நன்மைகளையும், அறிமுகங்களையும் தரவல்லவர்கள் இவர்கள்.

கடந்த காலங்களில் மீன் குழம்பும், கறிக்குழம்பும் வீட்டுக்கு வீடு மாறியது நினைவிருக்கும்; அந்த அளவுக்கு சுற்றத்துடன் நட்பு பாராட்டி வந்த நம் தமிழ்ச்சமூகம் தற்போது தனது வட்டத்தை குறுக்கிக் கொண்டே செல்கிறது.

முதலில் இந்த சமூக பிரச்னைக்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ளலாம். எதனால் மக்கள் சுற்றத்துடன் நட்பை குறைத்துக் கொள்கின்றனர் என்பது குறித்து நியூஸ் க்ளவுட்ஸ் செய்தித்தளம் கோவை மக்கள் மத்தியில் சர்வே நடத்தியது.

இதில், "பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசுவதில் என்ன சிரமம்?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு, 
1) பேச பிடிக்கும் ஆனால் தயக்கம் 
2) அவர்கள் பேசினால் நானும் பேசுவேன்
3) அதிகம் பேசாமல் இருப்பது நல்லது 
4) பேசுவது பிடிப்பதில்லை

உள்ளிட்ட 4 தேர்வுகள் கொடுக்கப்பட்டன. இதில், "பேச பிடிக்கும் ஆனால் தயக்கம்" என்பதை 33 பேர் தேர்வு செய்துள்ளனர். "அவர்கள் பேசினால் நானும் பேசுவேன்" என்ற தேர்வை 153 பேரும், "அதிகம் பேசாமல் இருப்பது நல்லது" என்ற தேர்வை 65 பேரும் தேர்வு செய்துள்ளனர். பேசுவது பிடிப்பதில்லை என 9 பேர் தெரிவித்துள்ளனர்.

வாக்களித்துள்ள பெரும்பாலானோர், தயக்கம் காரணமாகவே சுற்றத்தாருடன் பேசாமல் இருப்பது தெரியவருகிறது.

இந்த சர்வே முடிவுகள் அடிப்படையில் சக மனிதர்கள் அடிப்படையில் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவருகிறது என்றால் மீண்டும் நட்பு பாராட்டத் தயாராகுங்கள்; நாம் அனைவரும் நிச்சயம் ஒருவருக்கு பக்கத்துவீட்டுக்காரர் தானே! இந்த செய்தியை உங்கள் சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
"ஒரு உறவுமுறை சொல்லாதவரை
ஒரு உறவுக்குப் பெயரிடாதவரை
எல்லாப் புதிய உறவும் தித்திக்கத்தான்
செய்கின்றன" - மனுஷ்ய புத்திரன்.

சர்வே மீதான ஆரோக்கியமான விவாதங்களுக்கும், எதிர்காலத்தில் வரும் ஆரோக்கியமான விவாதங்களுக்கும், வாசகர் வட்ட வாட்ஸ்-ஆப் குழு தொடங்கப்பட்டுள்ளது.

குழுவில் இணைய இங்கு க்ளிக் செய்யவும்.

அன்பிற்கினிய வாசகர்கள் குழுவில் இணைந்து நாகரீகமான முறையில் கருத்துக்களை பகிரலாம், ஆரோக்கியமான முறையில் விவாதிக்கலாம். நாகரீகமற்ற பேச்சுக்கள் மீது உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நன்றி,
நியூஸ் க்ளவுட்ஸ் குழு.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe