வெள்ளியங்கிரி மலையில் தேங்கி கிடக்கும் குப்பைகள்...

published 8 months ago

வெள்ளியங்கிரி மலையில் தேங்கி கிடக்கும் குப்பைகள்...

கோவை: தென் கைலாயம் எனப்படும் கோவையில் உள்ள வெள்ளியங்கிரி லையில் சுயம்பு வடிவில் சிவன் காட்சியளித்து வருகிறார். ஏழு மலைகளைக் தாண்டி சிவனை காண்பதற்கு நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். அதே சமயம் வனத்துறையினர் பல்வேறு சமயங்களில் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு தடை விதிப்பர்.

இந்த நிலையில் தற்பொழுது வெள்ளியங்கிரி மலை இரண்டு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்தனர். அதே சமயம் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று வனத்துறையினர் கட்டுப்பாட்டு விதிவித்து சோதனை மேற்கொண்டு பக்தர்களை அனுமதித்தனர் அதனால் பலரும் மக்கும் பொருட்களை கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் பல்வேறு இடங்களில் அந்த பொருட்கள் குப்பைகளாக கொட்டப்பட்டுள்ளது. இந்த வெள்ளியங்கிரி மலை உள்ள ஏழு மலைகளும் இயற்கை சூழல் நிறைந்த இடமாய் கண்களுக்கு விருந்து படைக்கும் இடமாய் திகழ்ந்துவரும் நிலையில் தற்பொழுது பல்வேறு இடங்களில் குப்பைகள் காணப்படுவது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே இங்கு பக்தர்கள் செல்லும் வழியில் ஆங்காங்கே குப்பை தொட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe