கோவையில் புகையிலை எதிர்ப்பு சைக்கிளத்தான்!

published 8 months ago

கோவையில் புகையிலை எதிர்ப்பு சைக்கிளத்தான்!

கோவை: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கத்தான் மற்றும் சைக்கிளத்தான் நிகழ்ச்சியில் ஏராளமான பங்கேற்றனர்.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் புகையிலை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் மற்றும்  சைக்கிளத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜுனன் கொடி அசைத்து துவக்கி  வைத்தார். முன்னதாக கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நடனத்துடன் உறுதிமொழியை ஏற்றனர்.

தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள்,மருத்துவர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபயனம் மேற்கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை எந்தியபடி சென்றனர்.

சைக்கிளிங் மற்றும் நடைப்பயணத்தின் போது புகையிலை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் நோய்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe