கோவையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும் - கலெக்டர்

published 8 months ago

கோவையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும் - கலெக்டர்

கோவை: மழை நீரை முழுமையாக சேமிக்கின்ற வகையில் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அமைந்துள்ள பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீர் செய்து மழை நீரை முழுமையாக சேமிக்க வேண்டும்,
என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்க கூட்டரங்கில், மழைநீர் சேகரிப்பு தொடர்பான கருத்தரங்கு கூட்டம், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,  கோயம்புத்தூர் மாவட்டத்தின் காலநிலை மாற்றம் நமக்கு நன்மையாக அமைந்தாலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நொய்யல் ஆறு மற்றும் சிறுவாணி ஆறு போன்றவைகள் நமக்கு நீர் ஆதாரமாக விளங்குகின்றது.   கோயம்புத்தூர் மாவட்டத்தின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற்போல், மழைநீரை முழுமையாக சேமிக்கின்ற வகையில் பொதுமக்கள் அனைவருக்கும் மழைநீரை சேமிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அமைந்துள்ள பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீர் செய்து மழை நீரை முழுமையாக சேமிக்க வேண்டும்.

மழைநீர் சேகரிப்பதற்கான முயற்சிகள் சரி வர இல்லாமல் இருப்பதால் காலநிலை மாற்றத்தினால் மழை காலங்களில் மழை நீரானது சாலைகளில் தேங்குகிறது. எனவே, ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீர் செய்து மழை நீரை முழுமையாக சேமிக்க வேண்டும், மேலும், கட்டமைப்புகளை அடிக்கடி சரிபார்த்து மழைநீரை சேகரிப்பதால் மழைநீரை நிலத்தடிக்கு செலுத்தி பூமியின் நீர்மட்டம் உயர ஏதுவாக அமையும். மேலும் பொதுமக்கள் அனைவரும் மழைநீர் சேகரிக்கும் இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe