கோவையில் "இறுதிச்சுற்று" முடிவு

published 8 months ago

கோவையில் "இறுதிச்சுற்று" முடிவு

கோவை: கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் 24 சுற்றுகளும் முடிவடைந்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோவையைப் பொறுத்த வரையில் 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன.

முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் ராஜ்குமார் முதலிடம் பிடித்து வந்தார். இதனிடையே இறுதிச் சுற்றான 24ம் சுற்றின் எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

இதன் முடிவில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் 5,64,662 வாக்குகள் பெற்றுள்ளார். இரண்டாமிடத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்ளார். அவர்  4,47,101 வாக்குகள் பெற்றுள்ளார்.

கோவை அதிமுக., கோட்டை என்று அதிமுக., தொண்டர்கள் கூறி வந்த நிலையில், இந்த தேர்தலில் அக்கட்சி 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வேட்பாளர் ராமச்சந்திரன் 2,35,313 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியினர் இந்த தேர்தலில் கோவை தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்று 4ம் இடத்தை பிடித்துள்ளனர். வேட்பாளர் கலாமணி 82,273 வாக்குகளை பெற்றுள்ளார்.

மொத்தம் 1,17,561 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை பெற்றுள்ளார். இன்னும் தபால் வாக்கு எண்ணிக்கை  இரண்டாம் சுற்று விபரங்கள் மட்டும் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது.

இதனைத் தொடர்ந்து ராஜ்குமாரின் வெற்றி அறிவிக்கப்பட உள்ளது. இதனிடையே கோவையின் பல்வேறு பகுதிகளிலும் திமுக., தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கையில் "ஆடு" ஒன்றை வைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் நக்கல் தான் 'ஹைலைட்' அந்த வீடியோவை காண: https://youtu.be/heSYU5VG7s8

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe