துறைமுகத்தில் வேலை: பொறியியல் தகுதி... 1 லட்சத்திற்கு மேல் சம்பளம்!

published 8 months ago

துறைமுகத்தில் வேலை: பொறியியல் தகுதி... 1 லட்சத்திற்கு மேல் சம்பளம்!

துறைமுகத்தில் தலைமைப் பொறியாளர் (Cheif Engineer Port) பதவிக்கான பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில்   துறைமுகத்தில் தலைமைப் பொறியாளர் பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

கல்வி

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்  இளங்கலை  சிவில் பொறியியல் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்கவேண்டும்.  

அனுபவம்

துறைமுகம் அல்லது துறைமுக கட்டுமானம் சார்ந்த துறையில் 17 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,20,000 முதல் 2,80,000 வரை சம்பளம்  வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?  

https://onlinevacancy.shipmin.nic.in/ என்ற இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.   விண்ணப்பிக்க கடைசி தேதி  01.07.2024  ஆகும்.

தேர்வு

தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரம்

இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் விபரங்களுக்கு https://onlinevacancy.shipmin.nic.in/home/dwnld_advt/366 என்ற அதிகார பூர்வ அறிவிப்பை காணவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe