HCL ஐடி நிறுவனத்தில் வேலை: டிகிரி போதும்... ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பளம்!

published 8 months ago

HCL ஐடி நிறுவனத்தில் வேலை: டிகிரி போதும்... ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பளம்!

HCL ஐடி நிறுவனத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இதற்கு உடனே  விண்ணப்பம்  செய்யலாம். HCL  நிறுவனத்தின் கிளைகள் சென்னை, நொய்டா உள்பட பல முக்கிய நகரங்களில் செயல்படுகிறது.  

தற்போது சாப்ட்வேர் என்ஜினியர்/சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு காலியிட அறிவிப்பு வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  2021 முதல் 2023ம் ஆண்டுக்குள் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NET, JAVA Full Stack, Java Guidewire, Automation Testing Selenium SAP உள்ளிட்டவற்றில் திறன் இருக்க  வேண்டும். குறிப்பிட்ட பிரிவில் 6 முதல் 24 மாதங்கள் பணியாற்றிய அனுபவமும் பெற்றிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்கள்  இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இதன்மூலம் சென்னையில் பணி நியமனம் பெற வாய்ப்புள்ளது.  ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

நொய்டா மற்றும் சென்னையில் ஜுன் 8  காலை 10 மணி முதல் நடைபெற நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  

இந்த பணியிடங்கள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள https://forms.office.com/pages/responsepage.aspx?id=N-edGDrJWk-LaG9MqZQZEn_4YzJg3wtMqTZGj64AarhUM0oxTzZRNVBHSjNQWTY1SjEwOUsxUFo1Qy4u என்ற அறிவிப்பை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe