கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள்- இரண்டாம் நாள் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள்...

published 8 months ago

கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள்- இரண்டாம் நாள் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள்...

கோவை: கோவை வ.உ.சி பகுதியில் உள்ள மாநகராட்சி கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கில்- 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் மற்றும் 21 வது சிஆர்ஐ பம்ப்ஸ் மகளிர் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நேற்று துவங்கியது. 

 

இதில் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற 8 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் விளையாடுகின்றன. இப்போட்டிகள் வரும் 9-ம் தேதி வரை நடைபெறும். இதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசமாகும்.

இரண்டாம் நாள் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை - லயோலா அணியை எதிர்த்து பெங்களூரு - பேங்க் ஆப் பரோடா அணி விளையாடியது. இதில் பேங்க் ஆப் பரோடா அணி 80 - 70 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

லக்னோ - உத்திரபிரதேச போலீஸ் அணியை எதிர்த்து சென்னை - இந்தியன் வங்கி அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 82 - 73 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

கோயம்புத்தூர் - கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை எதிர்த்து திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 96 - 67 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

21 வது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான மகளிர் பிரிவு முதல் போட்டியில் கோயம்புத்தூர் - கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை எதிர்த்து செகந்திராபாத் - தென் மத்திய ரயில்வே அணி விளையாடியது. இதில் தென் மத்திய ரயில்வே அணி 107 - 57 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

சென்னை - தெற்கு ரயில்வே அணியை எதிர்த்து கொல்கத்தா - கிழக்கு ரயில்வே அணி விளையாடியது. இதில் தெற்கு ரயில்வே அணி 80 - 71 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

சென்னை - ரைசிங் ஸ்டார் அணியை எதிர்த்து மும்பை - மத்திய ரயில்வே அணி விளையாடியது. இதில் மத்திய ரயில்வே அணி 78 - 62 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

மும்பை மேற்கு ரயில்வே அணி கேரள மின்சார வாரிய அணியை 83-45 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe