கோவை வரும் ரயில் சேவைகள் 5 நாட்களுக்கு மாற்றம்!

published 8 months ago

கோவை வரும் ரயில் சேவைகள் 5 நாட்களுக்கு மாற்றம்!

கோவை: கோவை ரயில்வே யார்டில் பொறியியல் பணிகளை மேற்கொள்வதால் கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

A.  பின்வரும் ரயில் சேவையானது 15, 17, 18, 19 & 20 ஆகிய தேதிகளில் போதனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்

·         ரயில் எண்.06458 ஷோரனூர் - கோயம்புத்தூர் ரயில், கோவை மத்திய ரயில் நிலையத்தில் காலை 11.10 மணிக்கு சென்றடையும். ஆனால் மேற்குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

B.  15, 17, 18, 19 & 20 ஆகிய தேதிகளில் போதனூர் ரயில் நிலையத்திலிருந்து பின்வரும் ரயில் சேவைகள் தொடங்கும்

·         ரயில் எண்.06459 கோயம்புத்தூர் - ஷோரனூர் ரயில், போத்தனூர் ரயில் நிலையட்தில் இருந்து மாலை 4.41க்கு புறப்படும்.  மேற்குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் கோவை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படாது.  

இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe