மணப்பெண் தோழி கீர்த்தி சுரேஷ்... புடவையில் கலக்கல் போட்டோஸ்!

published 8 months ago

மணப்பெண் தோழி கீர்த்தி சுரேஷ்... புடவையில் கலக்கல் போட்டோஸ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தோழி ஒருவரது திருமணத்தில் மணப்பெண் தோழியாக  இருக்கும் போட்டோஸ்களை  வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக  நடித்து வருகிறார்  கீர்த்தி சுரேஷ். மகாநடி படத்துக்காக இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா என்ற தமிழ் படம் உருவாகி உள்ளது. இந்தி எதிர்ப்பை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் இது. வரும்  ஆகஸ்ட் 15 தேதி திரைக்கு வருகிறது.

தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்த இவர், தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். பாலிவுட்டில் பேபி ஜான் என்ற படத்தில்  ஹீரோயினாக அறிமுகமாகிறார். பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக  கீர்த்தி சுரேஷ்  வலம் வருகிறார்.

இந்த நிலையில்  சமீபத்தில் தன் உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சேலையில் செம்ம அழகாக ஜொலிக்கிறார். இவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.


Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe