கலர்புல் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

published 8 months ago

கலர்புல் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அசத்தலான  புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர் வெள்ளித் திரையில் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

வெற்றிமாறன் தயாரிபில்,  மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின்  திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

இதனைத் தொடர்ந்து கோலிவுட்டில் இவருக்கு  பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  வட சென்னை, கனா, பூமிகா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், தீராக் காதல்  ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்தன.  

தற்போது தமிழ், மலையாளம்,  கன்னடம்,  இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இப்படி பிசியான நாயகியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடிக்கடி போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது  சிவப்பு நிற ஆடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  இதற்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe