வெள்ளலூர் குப்பை கிடங்கு- மக்களுக்கு விடிவுகாலம் கொடுக்கின்ற வகையில் புதிய முயற்சி...

published 8 months ago

வெள்ளலூர் குப்பை கிடங்கு- மக்களுக்கு விடிவுகாலம் கொடுக்கின்ற வகையில் புதிய முயற்சி...

கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் மரக்கன்றுகளை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வெள்ளலூர் குப்பைகிடங்கு வளாகத்தில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் சுமார் 2000  மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் தசிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார், தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் பசுமையான சூழல் ஏற்படுத்தும் வகையில் குப்பை கிடங்கு எல்லை பகுதியில் சுமார் 9.4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வேம்பு, பூவரசன், புங்கன் மற்றும் நாவல் உள்ளிட்ட 14 வகையான மரங்கள் என 2000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளன. 

மேலும் மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில், மாண்புமிகு மேயர், தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து, நல்ல முறையில் பராமரித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் சிவகுமார். மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், தெற்கு மண்டல குழுத்தலைவர் தனலட்சுமி, மாநகர நல அலுவலர் பூபதி, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe