விஜய் 50வது பிறந்த நாள்: 'Goat' படத்தின் புது அப்டேட்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

published 8 months ago

விஜய் 50வது பிறந்த நாள்: 'Goat' படத்தின் புது அப்டேட்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

நடிகர் விஜய் நடிக்கும் 'கோட்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் 68-வது படத்தை  வெங்கட் பிரபு இயக்குகிறார். கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (The GOAT) என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. முதல் முறையாக வெங்கட் பிரபு - விஜய்  கூட்டணி இணைத்துள்ளதால்,   ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது.

article_image1

இந்த படம் குறித்த அப்டேட் அவ்வபோது வெளியான வண்ணம் உள்ளது. நடிகர் பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, ஜெயராம், லைலா, அஜ்மல், லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா  படத்திற்கு இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. வரும்  செப்டம்பர்  5 அன்று கோட் திரைப்படம்  திரைக்கு வர உள்ளது.  கோட் படத்தின் முதல் பாடலான 'விசில் போடு' பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்பாடலை விஜய் பாடி இருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாள், நாளை (ஜூன் 22) கொண்டாடப்பட்ட உள்ள நிலையில், படக்குழுவினர் புதிய  அப்டேட் ஒன்றை தந்துள்ளனர்.  

Image

தி கோட் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  'சின்ன சின்ன கண்கள்' என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு, நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி வெளியாகியுள்ளது. இந்த பாடலையும்  விஜய் பாடியுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe