படையெடுக்கும் பாம்புகளால் விளாங்குறிச்சி மக்கள் 'கிலி'

published 8 months ago

படையெடுக்கும் பாம்புகளால் விளாங்குறிச்சி மக்கள் 'கிலி'

கோவை:கோவை விளாங்குறிச்சி பகுதியில் முறையாக பராமரிக்கப்படாத குடிநீர் தண்ணீர் தொட்டி இடத்தில் இருந்து வெளியேறும் பாம்புகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாநகராட்சி  32வது வார்டு விளாங்குறிச்சி மருதம் நகர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் தொட்டி உள்ளது.  தற்போது இந்த குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் சூழலில் குடிநீர் தொட்டிக்கு கீழே சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி வீடுகள் இருக்கும் பகுதிகளுக்கு வந்து விடுவதாகவும், இதனால் இப்பகுதியில் வசிப்பதற்கே அச்சமாக உள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் குழந்தைகள் விளையாடவே முடியாத சூழல் நிலவுவதாகவும் இப்பகுதியில் நடந்து செல்லவே பயமாக இருப்பதாக தெரிவித்தனர்.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறினர்.

தண்ணீர் தொட்டி இருக்கின்ற இடத்தை மாநகராட்சி பணியாளர்களோ குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களோ அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்த மக்கள் அப்படி செய்தால் தான் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகள் இருக்கின்ற பகுதிகளுக்கு வராமல் இருக்கும் என தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe