TNSTC: தொழில்பழகுநர் பயிற்சி.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

published 7 months ago

TNSTC:  தொழில்பழகுநர் பயிற்சி.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில்பழகுநர் இடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.  சென்னை, மதுரை மற்றும் கும்பகோணம் மண்டலங்களில்  தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

2020, 2021, 2022 மற்றும்  2023 ஆகிய வருடங்களில் இன்ஜினியரிங் படிப்பில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் 1 வருட தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதர பாடங்களில் டிகிரி படித்தவர்களும்  விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை  

இன்ஜினியரிங் டிகிரி  -  ரூ.9,000 மாதம் உதவித்தொகை 
இன்ஜினியரிங் டிப்ளமோ -  ரூ.8,000 மாதம் உதவித்தொகை 
இன்ஜினியரிங் அல்லா டிகிரி -  ரூ.9,000 மாதம் உதவித்தொகை

தேர்வு

தொழில்பழகுநர் பயிற்சிக்கு, கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மெரிட் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்கள்.  

எப்படி விண்ணப்பிப்பது?

https://nats.education.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து சம்பந்தபட்ட மண்டல பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களின்  விவரங்கள் http://www.boat-srp.com என்ற இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 08.07.2024 ஆகும். தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு 12.07.2024 அன்று வெளியாகும்.

மேலும் விவரம்

தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்கள் தொடர்பான மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு http://boat-srp.com/wp-content/uploads/2024/06/TNSTC_Notification_2024_25_3_Regions.pdf அறிவிப்பை முழுமையாக படித்து பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe