Traffic alert: கோவையில் போக்குவரத்து மாற்றம்!

published 7 months ago

Traffic alert: கோவையில் போக்குவரத்து மாற்றம்!

கோவை: மேம்பால கட்டுமான பணிகள் நடைபெறுவதால் அவினாசி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்: https://chat.whatsapp.com/BD91mw8tExzL8KfiPGY4km

இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகர், அவினாசி சாலை ஹோப்ஸ் பகுதி ரயில்வே மேம்பாலம் அருகில் 23ம் தேதி முதல் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, லட்சுமி மில்ஸ், காமராஜர் ரோடு, SNR சந்திப்பிலிருந்து அவினாசி மார்க்கமாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் (Commercial goods Vehicles, Slow Moving Vehicles), பீளமேடு பயனீர் மில் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி, விளாங்குறிச்சி மேம்பாலம், காந்திமாநகர், தண்ணீர் பந்தல் ரோடு S Bend சென்று வலதுபுறம் திரும்பி Tidel Park சாலை வழியாக அவினாசி சாலையை அடைந்து செல்லலாம்.

மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் / உரிமையாளர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்செய்தியை கோவை வாசிகளுக்கும், கனரக வாகன ஓட்டுனர்களுகும் பகிர்ந்து உதவிடுவீர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe