தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு விதை வில்லைகள் உற்பத்திக் கருவிக்கான தேசிய காப்புரிமை...

published 7 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு விதை வில்லைகள் உற்பத்திக் கருவிக்கான தேசிய காப்புரிமை...

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விதை வில்லைகள் உற்பத்திக் கருவிக்கான தேசிய காப்புரிமையைப் பெற்றுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகத்தால் இந்த காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

 

விதை வில்லை தொழில் நுட்பம் மாடி தோட்டங்களில் காய்கறி உற்பத்தியில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை எளிதாக்கி அதிக முளைப்புத்திறன் மற்றும் பயிர் வளர்ச்சியை ஊக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இத்தொழில்நுட்பம் தேவையான ஊட்டச்சத்துக்கள், வேர் வளர்ச்சி ஊக்கிகள், வீரியமேற்றப்பட்ட விதைகள், நன்மை தரும் நுண்ணுயிரிகள், அதிகமான நீரை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்கள் ஆகியவை சரியான விகிதத்தில் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த கண்டுபிடிப்பின் முக்கிய அம்சமாக திகழ்வது விதை வில்லைகளை தயாரிக்கப்படும் இயந்திரமாகும். இவ்வியந்திரத்தைப் பயன்படுத்தி தரமான மற்றும் ஊட்டமேற்றப்பட்ட விதையை மேற்கூறிய அத்தியாவசிய பொருட்களுடன் கலந்து வில்லைகள் உருவாக்கப்படுகிறது. இந்த நுட்பத்தினால் அதிக மகசூல், தரமான வீட்டுக்கு தேவையான காய்கறிகளை பொதுமக்களே உற்பத்தி செய்யலாம்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி விதை வில்லைகள் உற்பத்திக்கருவி வடிவமைப்புக்கான காப்புரிமை சான்றிதழை,
காப்புரிமை பெற்ற மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு  முதுநிலை பட்ட
மேற்படிப்பு பயிலக முதன்மையர்செந்தில் முன்னிலையில் வழங்கி
கௌரவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe