கோவையில் தேசியக்கொடி தயாரிப்பு பணி மும்முரம்..!

published 2 years ago

கோவையில் தேசியக்கொடி தயாரிப்பு பணி மும்முரம்..!

கோவை: நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி வீடுகளில் பறக்க விடுவதால் கோவை மணிக்கூண்டு பகுதியில் தேசியக்கொடி உற்பத்தி அதிகரித்துள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற பிரச்சாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என அதன் படி நாடு முழுவதும் 20 கோடி வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வருகிற 13-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசியக் கொடியைப் பறக்க விடும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

 நாட்டு மக்கள் அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று நாட்கள் வீடு தோறும் தேசியக்கொடிகள் ஏற்பட உள்ளதால் தேசியக் கொடிகள் அதிக அளவில் தேவைப்படுகிறது. 

அந்த வகையில் கோவையில் உள்ள மணிக்கூண்டு பகுதியில் தேசியக் கொடியில் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இங்குத் தயாராகும் கொடிகளை வாங்குவதற்குத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன.

 இதனால் வழக்கத்தை விடக் கொடி உற்பத்தி அதிகரித்துள்ளது கோவையில் 4 லட்சம் கொடிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குடி தயாரிப்பாளர் கூறினார்.

இதுகுறித்து கோவை மணிகண்டில் தேசியக்கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ராஜேந்திரன் கூறும் போது

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணியைக் கடந்த மே மாதம் தொடங்கி விட்டோம், கதர் துணிகளில் தேசியக்கொடி தயாராகிறது. கதர், காகிதம் நெகிழிக் காகித அட்டை ஸ்டிக்கர் என பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இங்குத் தயாராகும் கொடியாலுக்குக் கோவை மாவட்டம் முழுவதும் மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து ஆர்டர்கள் வந்து வண்ணம் உள்ளன. இதற்கிடையே மத்திய அரசு 13ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை வீடுகளில் மக்கள் கொடியேற்றக் குழுவிற்கு அனுமதி கொடுத்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் பலரும் தேசியக்கொடிகள் வாங்குவார்கள் இதைத்தவிரக் கல்வி நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள் தேசியக்கொடி வாங்க உள்ளனர். இதனால் இந்த ஆண்டு தேசியக் கொடி விற்பனை இன்னும் அதிகரிக்கும் நாங்கள் நிர்ணயிக்கும் விதை விட அதிக அளவில் தேசியக்கொடி விற்பனை நடைபெறுவதற்கு, வாய்ப்புகள் இருக்கிறது.

 மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தேசியக்கொடி தயாரிப்பு மற்றும் இன்றி பலூன் தயாரிப்பாளர் உள்ளிட்ட பலருக்கும் வேலை கிடைத்துள்ளது என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe