தமிழ்நாடு அரசு வேலை: 75,000+ பணியிடங்கள்... முக்கிய அறிவிப்பு!

published 7 months ago

தமிழ்நாடு அரசு வேலை: 75,000+ பணியிடங்கள்... முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு துறைகளில்  இருக்கும்  75,000க்கும் அதிகமான  பணியிடங்கள் இன்னும் 18 மாதங்களில் நிரப்பப்பட உள்ளதாக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

தற்போது, 75,000க்கு மேற்பட்ட பணியிடங்களை இன்னும் 18 மாதங்களில்  நிரப்ப தமிழ்நாடு அரசு  திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் ஜனவரி 2026ம் ஆண்டுக்குள் நிரப்படவுள்ளது.

அதன்படி,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - 17,595 பணியிடங்கள்

ஆசிரியர் தேர்வு வாரியம் - 19,260 பணியிடங்கள்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் - 3,041 பணியிடங்கள்

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் - 6,688 பணியிடங்கள்

சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்  - 30,219 பணியிடங்கள்

என மொத்தம் 76,803 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது.

தேர்வு குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe