தமிழக அரசு ஆட்டோ,கால் டாக்ஸி ஓட்டுநர் சங்க உறுப்பினர்களுக்கு மானிய விலையில் டீசல்,பெட்ரோல் வழங்க வேண்டும்- தீரன் தொழிற்சங்க பேரவை கோரிக்கை...

published 7 months ago

தமிழக அரசு ஆட்டோ,கால் டாக்ஸி ஓட்டுநர் சங்க உறுப்பினர்களுக்கு மானிய விலையில் டீசல்,பெட்ரோல்  வழங்க வேண்டும்- தீரன் தொழிற்சங்க பேரவை கோரிக்கை...

கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீரன் தொழிற்சங்க பேரவை சார்பாக கோவை மாநகரில் இயங்கி வரும் இருசக்கர வாடகை வாகனத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

 

மேலும் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு இயக்குவதால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் ஆட்டோ, டாக்ஸி வாடகை வாகனங்கள் நலிவடைந்து உள்ளதாகவும் இரு சக்கர வாடகை வாகனத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று மத்திய,மாநில அரசுக்கு கோரிக்கை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர்.

தமிழக அரசு ஆட்டோ,கால் டாக்ஸி ஓட்டுநர் சங்க உறுப்பினர்களுக்கு மானிய விலையில் டீசல்,பெட்ரோல் 
வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பொது மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் நகர பேருந்துகளில் பக்கவாட்டில் வழித்தடங்களை நிறுத்தம் வாரியாக தமிழில் எழுத ஆவண செய்ய வேண்டும்.

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சாலைகளை பராமரிக்கவும் அவிநாசி மேம்பாட்டு விரைந்து முடிக்க வேண்டும் என்றும் சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மோட்டர் வாகன தொழிலாளர்களின் நலனை கருத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாடகை வாகன ஓட்டுநர்களுக்கான பணிகளை வரைமுறைபடுத்த வேண்டும்.

கோவையில் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்டு வரும் வாடகை இரு சக்கர வாகனத்திற்கு தடை விதிக்க வேண்டும்,சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe