பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

published 7 months ago

பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

கோவை தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு அதிக கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது வால்பாறை பகுதியிலும் கன மழை பெய்வதால் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறையானது அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு  வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்குள்ள மதகுகள் வழியாக 10,000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் ஆற்றைக் கடக்கவோ ஆற்றில் குளிக்கவோ கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்பொழுது 14,000 கன அடி நீர் திறந்து விட பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe