ஈமச்சடங்குக்கு கூட நிதி கொடுக்காத மாநகராட்சியை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

published 7 months ago

ஈமச்சடங்குக்கு கூட நிதி கொடுக்காத மாநகராட்சியை கண்டித்து கோவையில்  ஆர்ப்பாட்டம்

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை டாடாபாத் பகுதியில் இன்று காலை கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், உயிரிழந்த தூய்மை பணியாளர்களுக்கு ஈமச்சடங்கு காரியங்களுக்குக் கூட பணம் கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவின்படி ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.745 வேண்டும், 8 மாத ESI, PF வழங்காத தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரூ.15,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe