அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தை-ஒரு ஊசிக்கு 16 கோடி, ரூபாய் ஆகும் என்பதால் அரசை நாடியுள்ள பெற்றோர்…

published 7 months ago

அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தை-ஒரு ஊசிக்கு 16 கோடி, ரூபாய் ஆகும் என்பதால் அரசை நாடியுள்ள பெற்றோர்…

கோவை: கோவையில் முதுகெலும்பு தசை சிதைவு என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கிச்சை அளிக்க 16 கோடி ரூபாய் செலவாகும் என்பதால் அரசு உதவி செய்ய வேண்டுமென சிறுமியின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கோவை சிந்தாமணிபுதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், நித்யாதேவி, தம்பதியினர் இவர்களின் இரண்டரை வயதான இளைய மகள் தனது சிறு வயதிலிருந்து சுறு சுறுப்பாக இல்லாமலும், நடக்க முடியாமலும் இருந்து வந்துள்ளார்.

இதனை அறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த சிகிச்சையில் எவ்வித பயனளிக்காமல் இருந்ததால் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது குழந்தைக்கு மரபணு சோதனை முடிவில் SMA எனும் முதுகெலும்பு தசை சிதைவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வகை நோய்க்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூர் பப்டிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதை அறிந்த பெற்றோர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது மருத்துவர் இடையே ஆலோசனை பெற்றபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சிகிச்சை அளிக்க விட்டால் உயிர் போகும் அபாயமும் ஏற்படும் எனவும் இந்த நோய்க்கு இந்தியாவில் மருந்து இல்லாததால் ஸ்விட்சர்லாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் இந்த மருந்துக்கு ரூபாய் 16 கோடி வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த அரியவகை நோயிலிருந்து தங்களது குழந்தையை காப்பாற்ற தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் இதனை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe