சட்டங்களின் பெயர் மாற்றம்- இரண்டாவது நாளாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்...

published 7 months ago

சட்டங்களின் பெயர் மாற்றம்- இரண்டாவது நாளாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்...

கோவை: இந்திய நீதிமன்ற சட்டங்களான IPC, Cr PC, IEA ஆகிய மூன்று சட்டங்களை புதிதாக வடமொழியில் BNS- பாரதிய நியாய ஷன்ஹிதா, BNSS- பாரதிய நஹ்ரிக் சுரஷா, BS- பாரதிய சஷய அதினயம் என  மாற்றப்பட்டுள்ளதை கண்டித்து தமிழ்நாடு புதுச்சேரியில் கூட்டமைப்பின் சார்பில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் உண்ணாவிரதப் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று உண்ணாவிரத போராட்டமானது நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று நீதிமன்ற வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி வழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து நாளைய தினம் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து 8ம் தேதி திருச்சியில் கண்டன பேரணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe