மகளிர் சுய உதவி குழு பெயரில் கந்து வட்டி; கோவையில் பெண்கள் புகார்!

published 7 months ago

மகளிர் சுய உதவி குழு பெயரில் கந்து வட்டி; கோவையில் பெண்கள் புகார்!

கோவை: மகளிர் சுய உதவி குழுவில் பணம் பெற்று தருவதாக மோசடி செய்த கந்து வட்டி வசூலில் ஈடுபட்ட நபர்கள் மீது கோவை மேற்கு மண்டல ஐஜியிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்*

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதி வள்ளியம்மா லேஅவுட் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ரம்யா என்பவர் மகளிர் சுய உதவி  குழுவில் பணம் பெற்று தருவதாக கூறி வங்கி காசோலை மற்றும் சில ஆவணங்களை பெற்று பணம் அதிகமாக பெற்றும் குறைவான தொகையை கொடுத்து கந்து வட்டி வசூலில் ஈடுபடும் நபர்கள் மீது கோவை பந்தய சாலையில் உள்ள மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாதிக்கப்பட்ட மக்கள்,

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த நாகராஜனின் மனைவி ரம்யா, ரம்யாவின் தந்தை பூமிநாதன், தாயார் பரிமளா ஆகியோர் Jothi Capitals Pvt Ltd நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.அந்த நிறுவனம் மூலமாக 25,000 வரை பெற்று தருவதாக கூறி வார குழுவில் சேர வங்கி காசோலை,ப்ரோமிசேரி நோட்,ஆதார் ஆகிய ஆதாரத்தை வாங்கிக் கொண்டு குழுவில் பணம் பெற்று வாரம் தவணையில் செலுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் மூன்று வாரம் சென்ற பின்னர் ரம்யா வருகின்ற வாரம் முதல் இரண்டு மடங்கு கூடுதல் பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் ரம்யாவிடம் கேட்டபோது பணம் பெற்றுல் நிறுவனம் கூறுவதை கேட்க வேண்டும் இல்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க கூடும் என்று பணம் பெற்ற மக்களை மிரட்டி உள்ளார்.

அதனைத் தொடர்ந்து வாங்கிய வார குழு பணத்தை முழுவதுமாக செலுத்தி விட்ட நிலையில் ரம்யா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வங்கி காசோலை,ப்ரோமிசேரி நோட், ஆதார் ஆகிய ஆவணங்களை திரும்பித் தராமல் அலக்கழித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

மேலும் கடன் வாங்கிய நபர்கள் ஆவணங்களை வைத்து கூடுதல் பணம் பெற்று அதில் சிறு தொகையை குழுப் பணமாக கொடுத்துவிட்டு அதற்கு கூடுதல் கந்தி வட்டி வசூலில் ஈடுபட்டு ஆவணங்களை திருப்பித் தராமல் ரம்யா குடும்பத்தினரும் மற்றும் ஒரு சில நபர்கள் சேர்ந்து கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் மேற்கு மண்டல ஐஜி இதில் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் ஆவணங்களை திரும்பி பெற்று தர வேண்டியும் ரம்யா மற்றும் அவர் குடும்பத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் காவல் துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe