சவுரிபாளையம், உப்பிலிபாளையம் பகுதியில் போலீசார் சோதனை

published 2 years ago

சவுரிபாளையம், உப்பிலிபாளையம் பகுதியில் போலீசார் சோதனை

கோவை சவுரிபாளையம், உப்பிலிபாளையம் பகுதியில் ஐ எஃப் எஸ் நிதி நிறுவன ஆடிட்டர் வெண்ணிலா வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை

வேலூர் தலைமை இடமாகக் கொண்ட ஐஎப்எஸ் என்ற சர்வதேச நிதி சேவை மையம் தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் 8000 கொடுப்பதாக கூறி நூதன மோசடியில் ஐஎஃப்எஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது இதனை அடுத்து பொதுமக்கள் புகாரின் அடிப்படையில்  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேலூர் சென்னை கோவை காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்  கோவை சவுரிபாளையம் உள்ள  உப்பிலிபாளையம்  பகுதியில் உள்ள ஐ எஃப் எஸ் நிதி நிறுவன ஆடிட்டர் வெண்ணிலா வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் வங்கி கணக்குகள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ள ஆவணம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe