தேசிய தடகளப்போட்டியில் சீறிய கோவையின் தங்கமகள்!

published 7 months ago

தேசிய தடகளப்போட்டியில் சீறிய கோவையின் தங்கமகள்!

கோவை: ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர்களுக்கான தடகளப் போட்டியில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒலிம்பா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஒலிம்பா ஸ்டெஃபி மைகேல்.
இவர் அவினாசி சாலை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் முதுகலை வரலாறு 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

சிறுவயதில் இருந்தே தடகள விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்த ஒலிம்பா பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலை அளவிலான தடகள போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

இதனிடையே, ஜூன் மாதம் சென்னையில் மாநில அளவிலான சீனியர்களுக்கான தடகளப்போட்டி நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட ஒலிம்பா தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.

தொடர்ந்து, ஹரியானாவில் 27ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை நடைபெற்ற, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய அளவிலான தடகள சாமியன்ஷிப் போட்டில் கலந்து கொண்டார்.

இந்தியாவில் உள்ள பிரபலமான தடகள வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த தடகளப்போட்டிகளில், தடை தாண்டுதல் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் கலந்து கொண்ட இவர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

அடுத்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று, தெற்காசிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே தனது லட்சியம் என கூறுகிறார் ஒலிம்பா.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe