மேடை கலைஞர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த அதிருப்தி மனு...

published 7 months ago

மேடை கலைஞர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த அதிருப்தி மனு...

கோவை: கோவை மாவட்டத்தில் சுமார் 500- க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.மேலும் இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கேப்டன் விஜயகாந்த்,எம்.ஆர் ராதா போல் வேடமடைந்து நடனமாடி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடன கலைஞர்கள்,

40 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் திருவிழாக்கள் முறையான நடன நிகழ்ச்சி நடத்தி கலாச்சார சீரழிவு இல்லாமல் கண்ணியத்துடனும் நடன நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையான நடன கலைஞர்களுக்கு பல நிபந்தனைகளை விதித்து ஒரு தீர்ப்பும் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் முன்னாள் காவல் தலைவர் சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவுப்படி கோவில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் பாயும் என்று உத்தரவிட்டுள்ளார்.

நாங்கள் முறையான நிகழ்ச்சிகளை கோவில் திருவிழாக்கில் கோவை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகிறோம்.  இந்நிலையில் எங்கள் நடனத்துறைக்கும் கலைஞர்களுக்கும் சம்பந்தமில்லாத ஒரு சிலர் கோவை மாவட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேரூர் காலம்பாளையத்தை சேர்ந்த ஜெயந்தி ஆனந்தன் கருமத்தம்பட்டியை சேர்ந்த தனபால் என்பவர் இருவரும் கோவில் திருவிழாக்களில் கோவை மற்றும் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் மேடையிலே நம் கலாச்சார சீர்கேடு ஏற்படும் வகையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஆபாச நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களால் எங்களைப் போன்ற முறையான நடன கலைஞர்களுக்கு அவபெயர் ஏற்பட்டு வருகிறது எங்கள் வாழ்வாதாரமும் சீரழிந்து வருகிறது.எனவே இவர்கள் மீது உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கம் கைது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe